Offline
தபுவுடன் நாகார்ஜூனாவுக்கு தொடர்பா?
By Administrator
Published on 06/15/2025 08:00
Entertainment

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் நாகார்ஜுனா, தற்போது ரஜினியின் கூலி படத்திலும் தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.

90களில் நடிகை தபுவுடன் இணைந்து நடித்திருந்த நாகார்ஜுனாவை, அமலாவை திருமணம் செய்த பிறகும் தபுவுடன் தொடர்பில் உள்ளார் என கடந்த காலத்தில் சில வதந்திகள் கிளம்பின.

இதற்கு நடிகை அமலா நேராக பதிலளித்தார். "என் கணவரிடம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தபு என் நெருங்கிய தோழி. அவர் ஹைதராபாத் வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார்," என தெரிவித்தார்.

அமலாவின் பதிலடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Comments