Offline
ஹீரோவாக வலம் வர தயார் லோகேஷ் கனகராஜ்
By Administrator
Published on 06/15/2025 08:00
Entertainment

‘மாநகரம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது ‘கூலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், அடுத்து ‘கைதி 2’ படத்திற்கும் தயாராகி வருகிறார்.

இந்நிலையில், லோகேஷ் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க இருக்கும் லோகேஷ், அதற்காக தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விரைவில் இந்த புதிய ஹீரோவின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments