Offline
Menu

LATEST NEWS

பெண்கள் மீது கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டம் ரத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய தீர்மானம்.
By Administrator
Published on 06/19/2025 09:00
News

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், கருக்கலைப்புக்காக பெண்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் திருத்தத்தை, லேபர் எம்பி டோனியா ஆண்டோனியாச்சி முன்வைத்து, பாராளுமன்றம் பெரும்பான்மையுடன் (242 வாக்குகள்) நிறைவேற்றியது.இது, பெண்கள் எந்த நேரத்திலும் கருக்கலைப்பைத் தேர்வு செய்தால் அவர்களைக் குற்றவாளியாகக் காணக்கூடாது என்பதை உறுதி செய்கிறது. ஆனால் தற்போதைய கருக்கலைப்பு சட்டங்களை மாற்றவில்லை. சட்டம் அமலுக்கு வர மேலவையிலும் ஒப்புதல் தேவை.1861ஆம் ஆண்டு வந்த பழைய சட்டம் கருக்கலைப்பை குற்றமாகக் குறிப்பிடுகிறது, அதிகபட்சமாக ஆயுள் தண்டனைக்கும் இடமளிக்கிறது. ஆனால் 1967 சட்டப்படி, குறிப்பிட்ட சூழல்களில் 24 வாரங்களுக்குள் 2 மருத்துவர்களின் அனுமதியுடன் கருக்கலைப்பு legalaaga செய்யலாம்.இதற்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மீது போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறுகையில், "பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்படி கருக்கலைப்பு தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும்" என்றார்.

Comments