2025-ம் ஆண்டு பீஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மலேசியா விருந்தினர் நாடாக தேர்வாகியுள்ளது. இது, உலக நாடுகளுடன் கூட்டாண்மையை அதிகரிக்க சிறந்த வாய்ப்பு என துணை கல்வி அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.
மலேசிய மொழிபெயர்ப்பு மற்றும் புத்தக நிறுவனம் (ITBM) மற்றும் சீனாவின் GTCOM இணைந்து, ஏ.ஐ. மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலேசிய மொழி, கலாச்சாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.
மலேசிய வெளியுறவுத் துறை MATRADE, தேசிய புத்தக கவுன்சில் மற்றும் புத்தகத் துறை நிறுவனங்களுடன் இணைந்து டிஜிட்டல் பதிப்புரிமை, ஈ-காமர்ஸ் வாயிலாக சீன சந்தையில் மலேசியாவின் பங்களிப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
‘Read, Lead’ என்ற கருப்பொருளில் ஜூன் 18–22 வரை நடக்கும் 31-வது புத்தகக் கண்காட்சியில் 80 நாடுகளிலிருந்து 1,700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.