கத்தாரின் அல் உதெய்த் ராணுவ தளத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ விமானங்கள் இப்போது காணப்படவில்லை என செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன. ஜூன் 5-ஆம் தேதியில் இருந்த விமானங்கள், ஜூன் 19-இல் வெறும் மூன்று என குறைந்துள்ளன.இது, ஈரானின் தாக்குதலை முன்கூட்டியே தவிர்க்க அமெரிக்கா எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது.அமெரிக்க தூதரகம் தள அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஈடுபடுவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தளத்தின் ஈரானுக்கு அருகாமை மற்றும் தாக்குதலுக்கான அபாயம் குறித்து பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமானங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும், 27 அமெரிக்க விமானங்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவ ஆயத்தங்களை தீவிரப்படுத்தி வருகிறது.