நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தால் விமர்சனம் சந்தித்த நெல்சன் திலீப்குமார், ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
சினிமா மட்டும் அல்லாமல், விஜய் டிவியிலும் பல வெற்றி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் சில சீசன்கள், பிக் பாஸ் முதல் சீசன், விஜய் அவார்ட்ஸ் போன்ற பிரபலமான ஷோக்கள் நெல்சனின் இயக்கத்தில் உருவாகியவை என்பது பலருக்கும் தெரியாத சுவாரசியம்!