இஸ்ரேல்-ஈரான் மோதலின் பின்னணியில், இஸ்ரேலின் முக்கிய மையங்களை குறிவைத்த சைபர் தாக்குதல்களை ஈரான் பெரும்பாலும் தடுக்க முடிந்ததாக ஈரான் சைபர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை தெரிவித்தது.வங்கிக் கட்டமைப்பு, தகவல் திரட்டும் அமைப்புகள், மற்றும் இராணுவ கட்டுப்பாட்டு மையங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், இஸ்ரேலின் சில கட்டுப்பாட்டு அமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.தகவல் திருடும் மற்றும் மொபைல் மெல்வேர் பயன்பாட்டையும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலை ஆதரிப்பவர்களை அடையாளம் காண்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.