காகோஷிமா கடற்கரையில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படைகள் இணைந்து ஐந்து நாள் பயிற்சியில் ஈடுபட்டன. ஆள்கள் மீட்பு, கப்பல் மோதல், தீ அணைப்பு போன்ற கடற்படை சூழ்நிலை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.சமீபத்தில் சீனாவின் தாக்குதல் நடவடிக்கைகள், குறிப்பாக தெற்காசிய கடலில் பிலிப்பைன்ஸ் மீனவர்களை நோக்கி நீர்த்துப்பாக்கி பயன்படுத்திய விவகாரத்துக்குப் பின்னர் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
மூன்று நாடுகளும், சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளன. இந்த பயிற்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கி இருப்பதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.