Offline
ஜனநாயகன் கிலிம்ப்ஸ் சாதனை!
By Administrator
Published on 06/24/2025 09:00
Entertainment

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ கடந்த 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து போய்க்கொண்டு இருக்கின்றது. இதன் மூலம் கோலிவுட் படங்களில் ஒரு நாளில் அதிக பார்வையாளர்களை பெற்ற கிலிம்ப்ஸ் வீடியோ என்ற சாதனையை ஜனநாயகன் படைத்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை வசூல் மற்றும் விமர்சனங்கள் எந்தளவிற்கு தீர்மானிக்கின்றதோ அதுபோன்று சோஷியல் மீடியாவில் அப்படங்களுக்கும் அப்படங்களில் இருந்து வெளியாகும் அறிவிப்புகளுக்கும் எந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கின்றது என்பதும் முக்கியமாகிவிட்டது. யூடியூபில் டீசர், ட்ரைலர், சிங்கிள் பாடல் ஆகியவை எவ்வளவு பார்வையாளர்களை பெறுகின்றது என ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை ஒரு வீடியோ பெற்றுவிட்டால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.

மேலும் எந்த நடிகரின் படங்கள் அதிக வசூலை பெறுகின்றது என ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பார்த்து வருவதை போல எந்த நடிகரின் பாடல்கள் மற்றும் டீசர் அல்லது ட்ரைலர் அதிக பார்வையாளர்களையும், லைக்ஸையும் பெற்று வருகின்றது என்பதும் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமாகிவிட்டது.அந்த வகையில் விஜய் வசூல் சக்ரவர்த்தியாக மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார். அவரின் ஒவ்வொரு பட அறிவிப்புகளும் சோஷியல் மீடியாவில் பல சாதனைகளை நிகழ்த்தி மற்றும் தகர்த்தி வருகின்றது. அந்த வகையில் நேற்று தளபதியின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ஜனநாயகம் கிலிம்ப்ஸ் வீடியோ 24 மணி நேரத்தில் 34 மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Comments