கமல் - அன்பறிவு கூட்டணியில் KH237 தாமதம்; அருண்குமார் படத்தில் நடிக்கவுள்ள கமல்!
KH237 படம் அன்பறிவு இயக்கத்தில் உருவாக இருந்தாலும், கமல் கோரிய கதை மாற்றங்களால் படம் ஜனவரி 2025ல் தான் படப்பிடிப்பு துவங்கும் என சித்ரா லக்ஷ்மணன் தெரிவித்தார்.
இதற்குள் கமல், 'வீர தீர சூரன்' புகழ் அருண்குமார் இயக்கும் மற்றொரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் குறுகிய காலத்தில் உருவாகும் எனவும், அதன் பின்னர் தான் KH237 நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
இந்தியன் 2 மற்றும் தக்லைப் படங்களால் எதிர்பார்ப்பை தவறவிட்ட கமல், இந்த இரண்டு புதிய படங்களுடன் பெரிய கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.