சிரம்பானில் துரித உணவகம் அருகே நடந்த சண்டையில், அடையாளம் தெரியாதவர்கள் வெட்டியதில் ஒரு பாதுகாப்பு காவலர் படுகாயமடைந்தார். முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருந்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்; குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.