ECRL மற்றும் KTM தண்டவாளங்களில் அதிகரிக்கும் கேபிள் திருட்டு சம்பவங்களை கடுமையாகக் கையாள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் காவல்துறையிடம் வலியுறுத்தினார். இது தேசிய பாதுகாப்புக்கும், ரயில்வே திட்டங்கள் தாமதமடைவதற்கும் காரணமாக உள்ளதாக கூறினார். சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் ஆலோசனை செய்து, கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இது சாதாரண திருட்டு வழக்காகவே அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.