2023இல் அன்வார் அரசை கவிழ்க்க முயன்று தோல்வியடைந்த பெரிகத்தான் நேஷனல், 2028 பொதுத்தேர்தலுக்குள் புதிய தலைவரைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முஹிடின் தலைமையில் எதிர்க்கட்சி புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்ற முயலுகிறது.பாஸ் கட்சி செப்டம்பரில் கட்சி தேர்தலை எதிர்நோக்கி, ஹாடி அவாங் ஆன்மிக தலைமைக்குத் திரும்பலாம் என தகவல். பெர்சாத்துவில் ஹம்சா மற்றும் அஸ்மின் இடையே உள்பிரச்சனை காணப்படுகிறது.முஹிடின், 2024–2027 வரையிலான சிறந்த தலைமை அணியை விரைவில் அறிவிப்பார் என்றும், தற்காலிகமாகவே தலைமையிலிருப்பார் என்றும் கூறியுள்ளார். பாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், பிரதமர் வேட்பாளர் பெர்சாத்துவிலிருந்து வரவேண்டும் என வலியுறுத்துகின்றன.