பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள கால் சென்டரில் நடைபெற்ற சோதனையில், முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 10 பேர் (7 ஆண்கள், 3 பெண்கள்) கைது செய்யப்பட்டனர். 30–40 வயதுக்குட்பட்ட இந்த குழுவினர் குறுகிய காலத்தில் அதிக லாபம் என மொத்தம் ரூ.4 லட்சத்திற்கும் மேல் மக்களை ஏமாற்றியதாக தெரிகிறது.45,000 ரிங்கிட் மதிப்பிலான மடிக்கணினிகள், மொபைல் போன்கள், மானிட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் குழு மலேசியர்கள் மட்டுமின்றி இந்தியா, இந்தோனேசியாவை சேர்ந்தவர்களையும் குறிவைத்தது.பாதுகாப்பான முதலீடுகளுக்கான நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேக நபர்கள் மேலும் ஒரு வழக்கில் அம்பாங் ஜெயா போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.