2023 ஜனவரியில் இருந்து 2025 மே வரை 203 பேருந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 39 பேர் உயிரிழப்பு, 68 பேர் கடுமையாக காயம் மற்றும் 197 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.மலேசியாவின் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு இயக்குநர் முகமட் யூஸ்ரி கூறும்போது, ஓட்டுநர்களின் ஓய்வின்மை, அனுபவமின்மை, போதைப்பொருள் பயன்பாடு, வேக மீறல் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனங்களின் சீராக்குறை, நெருக்கமான அட்டவணை அழுத்தம், சரிவான சாலைகள், பராமரிப்பில்லா டயர்கள், ஒளி வசதி கோளாறுகள், மோசமான வானிலை, மற்றும் நிறுவன மேற்பார்வை குறைபாடுகளும் விபத்துக்களுக்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளன.