Offline
உயிரை கையில் பிடித்துக் கொண்டு விஜய்யை வாழ்த்திய விக்னேஷ் சிவன்: இதெல்லாம் ரொம்ப ஓவர்
By Administrator
Published on 06/25/2025 09:00
Entertainment

ஜனநாயகன் விஜய்யின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் டிசன் டிசைனாக அவரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.51வது பிறந்தநாளை கொண்டாடிய தளபதி விஜய்க்கு ஜுன் 22ம் தேதி வாழ்த்துக்கள் வந்து குவிந்துவிட்டது. திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட விஜய்யின் புகைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால் விஜய்யை வாழ்த்தி வெளியான புகைப்படங்களில் இரண்டு புகைப்படங்கள் வைரலாகின. அதில் ஒன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம். இன்னொன்றை பிறகு பார்க்கலாம்.தன் செல்ல மகனுடன் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஜனநாயகன் படம் மற்றும் அரசியல் எதிர்காலம் சிறக்க மனதார வாழ்த்தியிருந்தார் இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவன்.

அன்பான இயக்குநருக்கு அடுத்தவர்களை வாழ்த்துவது மிகவும் பிடிக்கும். யாராக இருந்தாலும் பாராட்டுவார், வாழ்த்துவார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விஜய்யை அவர் அவ்வளவு அழகாக வாழ்த்தியதை பார்க்காமல் விக்னேஷ் சிவன் கையில் இருக்கும் மகனை வைத்து விமர்சனம் செய்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.விக்னேஷ் சிவன் கையில் இருக்கும் மகன் உயிரை பார்த்துவிட்டு தான் அந்த பேச்சு பேசுகிறார்கள். உயிருடன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன். உயிரை கையில் பிடித்துக் கொண்டு தளபதியை வாழ்த்தினார் விக்னேஷ் சிவன் என அந்த செல்லக் குழந்தையின் பெயரை வைத்து விளையாடுகிறார்கள்.மேலும் சிலரோ இந்த வாழ்த்தில் கவிஞரும், நடிகருமான சினேகனின் இரட்டை மகள்களின் பெயரை வேறு சேர்த்திருக்கிறார்கள்.

Comments