தொழில் அதிபரும், நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான சஞ்சய் கபூர் ஜூன் 12 ம் தேதி லண்டனில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஜூன் 19ம் தேதி டெல்லியில் அவரின் இறுதிச் சடங்கு நடந்தது.தொழில் அதிபரும், நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான சஞ்சய் கபூர் ஜூன் 12 ம் தேதி லண்டனில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஜூன் 19ம் தேதி டெல்லியில் அவரின் இறுதிச் சடங்கு நடந்தது.இந்நிலையில் சஞ்சய் கபூரின் தங்கையான மந்திரா கபூர் ஸ்மித் தன் அண்ணனை நினைத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். சிறு வயதில் தான், சகோதரி, அண்ணன் சஞ்சய் கபூர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மந்திரா கூறியிருப்பதாவது,நானும், என் சகோதரரும் கடந்த நான்கு ஆண்டுகளாக பேசாமல் இருந்திருக்கலாம். உடன்பிறப்புகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை ஈகோவால் பெரிதாகிவிட்டது. ஆனால் அதனால் நாங்கள் யார் என்பது மாறிவிடாது.எங்களுடையது மகிழ்ச்சியான குழந்தைப் பருவம், எங்களின் பெற்றோர் மிகவும் பாசமானவர்கள். நாங்கள் உடன்பிறப்புகள் மூவரும் இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருந்தது, வெளியே சென்றது, ஜோக்குகள் சொல்லி சிரித்தது என எதுவும் மாறாது. ஒரு அண்ணனாக, நண்பனாக என்னையும், அக்காவையும் நன்கு பார்த்துக் கொண்டார்.
இறுதியில் நடந்தது மோசமானது ஆகும். என் அண்ணனுடன் இனி நான் நேரம் செலவிட முடியாது. பிரச்சனையை தீர்க்காமல் இருந்தது வேதனை அளிக்கிறது. எங்களுக்கு இடையே பிரச்சனை இருந்தாலும் நான் அவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும்.இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. யாருக்காவது குடும்பத்தாரோ, நண்பரோ யாரிடமாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் என் கதையை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பரிசு தான். பிரச்சனையை தீர்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி தீரவில்லை என்றால் வருத்தம் தான் மிச்சம். என் அண்ணனை கடைசியாக ஒரு முறை சந்தித்து நான் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதை சொல்ல எது வேண்டுமானாலும் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.ஒருவர் எத்தனை வருடம் உயிருடன் இருப்பார் என சொல்ல முடியாத காலமாக இருக்கிறது. இந்நிலையில் யாருடனாவது பிரச்சனை இருந்தால் பேசித் தீர்ப்பது நல்லது. பின்னர் அவர் இறந்தவிட்டால் அய்யோ பேசாமல் போய்விட்டோமே என வருத்தப்படுவதில் பலன் இல்லை என்கிறார்கள்.