அமெரிக்கா ஈரானின் அணு உலைக்களை தாக்கியதை கண்டித்து, டிரம்ப் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. நியூயார்க், டொரோண்டோ, பாரிஸ், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். "பொய்களின் அடிப்படையிலான போர் வேண்டாம்" என முழக்கமிட்ட அவர்கள், டிரம்ப் ஒரு போர் குற்றவாளி என்றும் குற்றம்சாட்டினர். சூழ்நிலை பதற்றமாக உள்ள நிலையில், அமெரிக்கா உலகளவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.