Offline
குணசேகரனின் விஸ்வரூபம் ஈஸ்வரியின் செயலால் மல்லுவேட்டியை குழப்பத்தில் ஆழ்த்தியது.
By Administrator
Published on 07/04/2025 13:16
Entertainment

தொடர்ந்து குட்டுப்பட்டு கொண்டிருந்த மருமகள்கள் குணசேகரனின் ஆட்டம் தாங்க முடியாமல் சீறி வருகிறார்கள். ஜெயிலிலிருந்து வெளிவந்தது கூட தெரியாமல் சர்வ சாதாரணமாக துப்பாக்கியை தூக்கி மிரட்டுகிறார். இது அவருக்கு தான் ஆபத்து என புரியவில்லை.

சுட்டுப் பார் என்று ஜனனி பெண் சிங்கம் போல் திமிரி நிற்கிறார். அதையும் தாண்டி நேற்று அவரது மனைவி ஈஸ்வரி காட்டிய கோபத்தால் கதி கலங்கி போனார் மல்லுவேட்டி மைனர். ஒருத்தரையும் விடமாட்டேன் முடித்து விடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் இந்த குணசேகரன்.ஒரு கட்டத்தில் வீட்டுப் பெண்களுக்கு நண்பனாய் உதவி செய்து கொண்டிருக்கும் ஜீவானந்தத்தை போட்டு தள்ளி விடுவேன் என குணசேகரன் கூறியதைக் கேட்டதும் பொங்கி எழுந்த ஈஸ்வரி போட்ட போடால் அவருக்கு மூஞ்சே செத்துப் போனது

ஜீவானந்தத்திற்கும் அவரது மகளுக்கும் உங்களால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இதுவரை பார்க்காத ஈஸ்வரியை நீங்கள் பார்ப்பீர்கள். எங்கு எதை செய்ய வேண்டுமென எனக்கு தெரியும், எந்த எல்லைக்கும் போய் உங்களை மாட்டி விடுவேன் என ஈஸ்வரி நெருப்பாய் மாறினார்.

ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் மற்றும் அவரது தம்பி கதிர் தான் கொன்றார்கள். இது ஈஸ்வரிக்கு தெரியும். இதைத்தான் அவர் சூசகமாக சொல்லி குணசேகரனை பயத்தில் நடுங்க வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சர்வமும் அடங்கிப் போய் நிற்கிறார் பரோல் பாண்டியன்

Comments