Offline
இம்ரான்கானின் அழைப்பு: பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்.
By Administrator
Published on 07/04/2025 13:47
News

லாகூர், பாகிஸ்தான்,முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் (2018–2022) நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியிழந்தார். அதன் பின், அவர்மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2023 ஆகஸ்ட் 5 அன்று கைது செய்யப்பட்ட இவர், தற்போது ராவல்பிண்டியின் அடிலா சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் அரசை எதிர்த்து 7ம் தேதி முதல் மக்களும், தனது கட்சி தொண்டர்களும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென இம்ரான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். "அடிமைத்தனத்தைவிட இந்த இருட்டு சிறையே எனக்கு நல்லது. சர்வாதிகார ஆட்சியில் தேர்தல் கிடையாது; ராணுவ பலத்துடன் ஆட்சி செய்வதுதான் வழக்கம்," என கூறிய அவர், ராணுவ தளபதி ஆசிம் முனீரை கடுமையாக சாடியுள்ளார்.

Comments