இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து பிரபல சுற்றுலா இடமான பாலி நோக்கி சென்ற பேருந்து கப்பல் புதன்கிழமை நள்ளிரவு முன் பாலி நீரிணையில் மூழ்கியது. கப்பலில் 53 பயணிகள் மற்றும் 12 கப்பல் பணியாளர்கள் இருந்ததாக சுரபாயா மீட்புப் பிரிவு தெரிவித்தது.KMP Tunu Pratama Jaya எனும் கப்பல் சுமார் 25 நிமிடங்களில் மூழ்கியது. இதுவரை நால்வர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் கப்பலின் உயிர்காப்பு படகின் உதவியுடன் தப்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆழ்கடலில் காணவில்லை என கூறப்பட்டுள்ளது.மேலும், 14 லாரிகள் உட்பட 22 வாகனங்களும் கப்பலில் இருந்தன. மீட்பு குழுவும், கப்பல்கள் மற்றும் ரப்பர் படகுகளும் விரைவில் அனுப்பப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.