புக்கிட் கோவில் பகுதியில் உள்ள வீட்டு மேம்பாட்டு திட்டத்தில், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத 250 கிலோ எடையுள்ள பழைய வான்வழி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பிற்பகல் 2.50 மணியளவில் ஒப்பந்ததாரர் கண்டுபிடித்த இந்த வெடிகுண்டை, குவாந்தான் மாவட்ட காவல்துறை மற்றும் பகாங் வெடிகுண்டு அகற்றும் பிரிவு இணைந்து பாதுகாப்பாக அகற்றினர். பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தொடாமல், உடனடியாக காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது அட்லி தெரிவித்தார்.