ஆயிர் ஹித்தாம் அருகே பிளஸ் விரைவுச்சாலையின் 80.7 கிமீ பகுதியில் இன்று அதிகாலை 12.44 மணிக்கு பயணிகள் பேருந்து மற்றும் இரண்டு லோரிகள் மோதியதில், 43 மற்றும் 44 வயதுடைய இரு ஆண்கள் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 46 பேரில் 14 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஓட்டுநர் காயமடைந்துள்ளனர். 28 பேர் காயமின்றி தப்பினர். லோரி ஓட்டுநர்களும் சிக்கல் இன்றி மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, மீட்புப்பணி அதிகாலை 3.02 மணிக்கு முடிந்தது.