மலேசிய அரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாபிஸ் ஙாசி மற்றும் மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளை இடனலையாட்டினார். இஸ்தானா பாசிர் பெலாஙி அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் மாநில நிதி அதிகாரி முகம்மட் ரிதா அப்த் காதிர், துணை மாநில செயலாளர் (வளர்ச்சி) டத்தோ அஸ்மான் ஷா அப்த் ரஹ்மான் மற்றும் நிலம், கனிமத் துறை இயக்குநர் முகம்மட் ஷாகிப் அலி ஆகியோரும் பங்கேற்றனர்.