பஹாங் சுங்கத்துறை, சிலாங்கூரில் உள்ள போர்ட் கிளாங்கில் நடைபெற்ற இரண்டு சோதனைகளில் மொத்தம் ஏழு கன்டெய்னர்களில் இருந்து சுமார் RM4.4 மில்லியன் மதிப்புள்ள மின் கழிவுகள் மற்றும் அலுமினியம் கழிவுகளை கடத்தும் முயற்சிகளை தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.மே 21ஆம் தேதி நடைபெற்ற இந்த சோதனைகள் பெண்டோங் சுங்கம் மற்றும் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது.முதல் சோதனையில் நார்த் போர்டில் மூன்று கன்டெய்னர்களில் 46,726 கிலோ மின் கழிவுகள் மீட்கப்பட்டு, அவை தவறான முறையில் ‘தங்கம் செறிவு’ என அறிக்கை செய்யப்பட்டதாக தெரியவந்தது.இரண்டாவது சோதனையில் நான்கு கன்டெய்னர்களில் 105,760 கிலோ அலுமினியம் கழிவுகள் மீட்கப்பட்டன, அவையும் தவறான முறையில் பிற பொருட்களாக அறிவிக்கப்பட்டது.இந்த பொருட்கள் தேவையான இறக்குமதி அனுமதி இல்லாமல் கொண்டுவரப்பட்டதற்கு சுங்க சட்டம் 1967 பிரிவு 135(1)(a) கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் அதிகபட்சம் RM5,00,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டு சிறை, அல்லது இரண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.