முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் RM170 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய, எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது.ஊழல் மற்றும் பணப்பழுதுபோக்கு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் பின்னர் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்தார். நீதிமன்றம் இந்த சொத்துகளை அரசுக்குப் பறிமுதல் செய்து கொடுக்க உத்தரவிட்டால், இவை அரசுச் சொத்துகளாக மாறும்.இஸ்மாயில் சப்ரி இந்த பறிமுதல் நடவடிக்கைக்கு எதிராக வாதிட விரும்பினால், வழக்கு விசாரணைக்கு செல்லும் என்றும் கூறினார். மேலும், குற்ற வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது பொது வழக்கறிஞரின் முடிவில் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.