அடையாள அட்டை விண்ணப்பங்களை சரியாக கையாளாததைத் தொடர்ந்து, அந்த நடைமுறையை மேம்படுத்த உள்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் சைபுதீன் நசூஷியான் தெரிவித்தார். குடிமக்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் போலி விவரங்கள் இருப்பதால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன என்றும், பிறப்பு இடம்பெறாத சுகாதார நிலையங்களில் பிறப்புச் சான்றிதழ்கள் பெறப்பட்ட சம்பவங்களும் உள்ளதாகக் கூறினார். ஆவணங்களைச் சரிபார்ப்பதில் தேசிய பதிவுத்துறைக்கு உறுதியானக் கொள்கை உள்ளதாகவும், தேவையான இடங்களில் மேம்பாடு செய்யத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். சபாவில் குழந்தை ஒருவர் அடையாள அட்டை பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து EAIC புகார் எழுப்பியதைத் தொடர்ந்து இது தெரிவிக்கப்பட்டது.