ஜோர்ஜ்டவுனில் உள்ள நான்கு உணவகங்கள், சமையல் மற்றும் பொருள் சேமிப்புப் பகுதிகளில் இலப்பம் காணப்பட்டதால், ஜூலை 16 வரை 14 நாட்கள் மூடப்பட்டுள்ளன. இந்த திடீர் ஆய்வை பினாங்கு தீவுக் மாநகர சபை (MBPP) நேற்று மேற்கொண்டது.பாதுகாப்பற்ற சூழ்நிலை, கடுமையான சுகாதார மீறலாகக் கருதப்பட்டதால், 1991ம் ஆண்டின் உணவகம் குறித்த சட்ட விதி 38(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், சில ஊழியர்கள் டைபாய்டு தடுப்பூசி போடாமலும், ஏப்ரன் மற்றும் தலை மூடியல் உள்ளிட்ட நிபந்தனைகள் பின்பற்றாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உணவகங்கள் சுகாதாரத்தை முக்கியமாகக் கருத வேண்டும் என்றும், லாபம் நோக்கி சுகாதாரத்தை புறக்கணிக்கக் கூடாது என்றும் MBPP எச்சரித்தது.வாடிக்கையாளர் பாதுகாப்புக்காக சீரற்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தது.