பினாங்கு வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள வாகன பணிமனைகளில் நேற்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அதிரடியில் 30 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 4 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டது.பொதுமக்கள் புகாரும், தொடர்ச்சியான கண்காணிப்பும் காரணமாக, இரு பணிமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடிக்கையாளர் வாகனங்கள் சாலை ஓரத்தில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறும், பாதுகாப்புக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியது.கால்நடைகள் பாதையில் வாகனங்களை நிறுத்தல், மஞ்சள் கோட்டில் நிறுத்தல், மற்றும் போக்குவரத்து இடையூறுக்கான விதிமீறல்கள் உள்ளிட்ட பல சட்டபிரிவுகளின் கீழ் குற்றங்கள் பதிவானது.சில தனிநபர்களும் வாய்ப்பை பயன்படுத்தி பணிமனைகளின் அருகே முக்கிய சாலையில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தியதாகவும் மன்றம் தெரிவித்தது.பொதுப் பாதுகாப்பையும் ஒழுங்கான போக்குவரத்தையும் உறுதி செய்ய, இந்நடவடிக்கைகள் தொடரும் என பினாங்கு நகர மன்றம் (MBPP) தெரிவித்துள்ளது.