Offline
Menu
கோலாலம்பூரில் ஜாலான் கோக்ரேனில் உணவகம் தீப்பற்றி 3 கடைகள் அழிவு, 4 கடைகள் சேதம்.
By Administrator
Published on 07/05/2025 09:00
News

கோலாலம்பூர் ஜாலான் நகோடா யூசுப் பகுதியில் உள்ள விருந்து உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 3 உணவுக்கடைகள் முற்றிலும் அழிந்ததுடன், 4 கடைகள் பகுதியளவில் சேதமடைந்தன. காலை 8.18 மணிக்கு பெறப்பட்ட அவசர அழைப்பின் பேரில் புதூ மற்றும் ஹாங் துவா மையங்களில் இருந்து 16 பேர் கொண்ட தீயணைப்பு குழு இரண்டு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் அனுப்பப்பட்டது. 5x7 அடி அளவுடைய 7 கடைகள் தீக்கிரையாகின. உயிரிழப்புகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. தீவிபத்தின் காரணம் மற்றும் சேதத் தொகை விசாரணையில் உள்ளது.

Comments