வாட்ஸ்அப்பில் நட்புகொண்ட ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் முதலீட்டு திட்டத்தில் சேருமாறு வலியுறுத்த, பஹாங் மாநிலத்தைச் சேர்ந்த 39 வயது செவிலியர் ஒருவர் RM6.3 லட்சத்திற்கும் அதிகமான தொகையை 10 வங்கிக் கணக்குகளுக்கு கடந்த மே 24 முதல் ஜூன் 29 வரை பணமிடப்பட்டது. 10% லாபம் தருவதாக கூறிய இத்திட்டம் போலியானது என்பதை, தருமானம் வராததும் மற்றும் இணையதள இணைப்பு இயங்காததும் உணர்ந்த இவர், கடந்த வாரம் குவாண்டான் போலீசில் புகார் செய்தார். இந்த மோசடி சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.