இன்று காலை சுபாங் ஆலம் எல்ஆர்டி நிலையத்தில், ஒரு பயணி தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. காலை 8 மணியளவில் ரயில் பிளாட்பாரத்துக்கு அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த பயணியை போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்டு, கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பினர். காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது என்றும், ரேபிட் ரெயில் நிறுவனம் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. சேவை காலை 10.22 மணிக்கு மீண்டும் தொடங்கியது. கடந்த சில மாதங்களில் இதேபோன்ற சில பயணிகள் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன.