அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் "மாட்ரே தீ" எனப்படும் காட்டுத்தீ 52,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை ஒரே நாளில் நாசமாக்கியுள்ளது. சான் லூயிஸ் ஓபிஸ்போ பகுதியில் ஏற்பட்ட இந்த தீ, ஆண்டின் இதுவரை மிகப்பெரிய காட்டுத்தீயாகும். ஏற்கனவே 200 பேர் பேரிடர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பல கட்டடங்கள் தீ அபாயத்தில் உள்ளன.மூன்று நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம், தீயை அணைக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் ஆதரவு தரப்படும் என தெரிவித்துள்ளார்.கடந்த வெயில்காலத்தில் கனமழை இல்லாததால் தாவரங்கள் வறண்டு விட்டதாக UCLA வானிலை நிபுணர் டேனியல் ஸ்வெயின் தெரிவித்துள்ளார். இதனால் இந்த கோடை தீவிபத்து மோசமாக இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.இந்நிலையில், வனத்துறை, வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கான நிதியை டிரம்ப் நிர்வாகம் குறைத்தது குறித்து ஆளுநர் நியூசம் கண்டனம் தெரிவித்துள்ளார்.