தென் பசிபிக் பகுதியில் இராணுவத் தளத்தை நிறுவ சீனாவுக்கு திட்டமில்லை என ஃபிஜியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் உதவிகள் எந்த அரசியல் நிபந்தனைகளும் இன்றி வழங்கப்படுவதாகவும், தங்களது நடவடிக்கைகள் தவறாக விளக்கப்படுவதாகவும் தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.ஃபிஜி பிரதமர் சிடிவேனி ரபுகா, சீன இராணுவம் எங்கள் நாட்டுக்குள் வர விரும்பினால் வரவேற்க முடியாது எனத் தெரிவித்தார். சீனா சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை கட்டுவதற்காகவே பசிபிக் நாடுகளில் செயல்படுவதாகவும், அவர்கள் முழு உரிமையோடு செயற்பட வேண்டும் என்பதே பீஜிங் நோக்கமெனவும் சீன தூதரகம் கூறியது.சாலமன் தீவுகள் உள்ளிட்ட சில நாடுகள், சீனாவுடன் நெருங்கிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, தைவானுடன் இருந்த ராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன. இந்த நிலையில், சீனாவின் உண்மையான நோக்கங்களை மேற்கு நாடுகள் சந்தேகத்துடன் காண்கின்றன.