Offline
அமெரிக்கா நைட் கிளப்புக்குப் துப்பாக்கிச் சூடு: 4 பேர் கொலை
By Administrator
Published on 07/05/2025 09:00
News

அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரிவர் நார்த் பகுதியில் உள்ள நைட் கிளப் ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி திடீரென சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர் குற்றவாளிகள் வாகனத்தில் தப்பினர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கிச் சூடில் 13 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் சிக்கினர். உயிரிழந்தவர்கள் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments