மராட்டியத்தில் கடனுச் சுமை மற்றும் பயிர் சேதம் உள்ளிட்ட காரணங்களால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களுள் 164 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தகுதி உள்ளதாகவும், 153 பேரின் தகுதியை நிரூபிக்க விசாரணை நடந்து வருவதாகவும், மற்றவர்கள் தகுதி இல்லாதவர்கள் எனவும் நிவாரணத் துறை அமைச்சர் மார்க்ரண்ட் பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது நிவாரணத் தொகையை அதிகரிக்க எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.