Offline
Menu
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: 4ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.
By Administrator
Published on 07/06/2025 09:00
News

ஷா ஆலம், செக்‌ஷன் 13-ல் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது நாலாம் படிவ மாணவர் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. அவருடன் பயணித்த மற்றொரு மாணவர் கழுத்து, கால்களில் காயமடைந்து ஷா ஆலம் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். போலீஸ் சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் தொடர்பில் தகவல் உள்ளவர்கள் இன்ஸ்பெக்டர் அப்துல் நாசர் பெப்பிங்கை 012-2863875 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Comments