ஜோகூர், சிலாங்கூர் மற்றும் மலாக்கா மாநிலங்களில் உள்ள ஆறு உலோக தொழிற்சாலைகளில் ‘Op Padu 2.0’ செயல்பாட்டின் போது RM96.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத உலோக பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் பறிமுதல் செய்யபட்டன.இவையில்ப் 11,000 ரீபார்கள், 152,830 ஹாலோ ஸெக்ஷன் ஸ்டீல் பார், 4,393 ஃபிளாட் பார், 2,432 ஹாட்-டிப்ப்டு கல்வனைசு ஸ்டீல் கோயில்கள், உலோக வெட்டும் இயந்திரங்கள், 3 ஃபோர்க்லிஃப்ட் மற்றும் 152 எரிவாயு சிலிண்டர்கள் அடங்கும்.இந்த உலோகங்கள் PPS சான்றிதழ் இல்லாமல், கட்டடத் துறையில் பயன்படும் இரும்புப் பொருட்கள் CIDB சான்றிதழின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.மேலும், 3 உள்ளூர் ஆண்கள் மற்றும் 57 வெளிநாட்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு RM12,000 அபராதம் விதிக்கப்பட்டது.இந்த நடவடிக்கையில் போலீசு, குடிநுழைவு, சுங்கம், சுற்றுச்சூழல் துறை, CIDB, SIRIM மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர்.