செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பிரதமர் அன்வார் இப்ராஹிம், தொழிலதிபர் ராபர்ட் குவோக், டோனி பெர்னாண்டஸ் போன்ற முக்கிய நபர்களின் போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு மோசடி முதலீட்டுத் திட்டங்களில் பொதுமக்களை ஏமாற்றி RM2.11 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று MCA தலைவர் டத்தோ ஸ்ரீ மைக்கேல் சொங் தெரிவித்தார்.இந்த வீடியோக்கள் மிகவும் உண்மையாகவே இருப்பதால் பொதுமக்கள் உண்மையென நம்புகின்றனர். சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கும் இந்த மோசடிகளை தடுப்பதில் அதிகாரிகள் முயற்சி எடுத்தாலும், மோசடிக்காரர்கள் தொடர்ச்சியாக புதிய வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள்.MCA குழுவினர் நடத்திய சோதனையில், போலி முதலீட்டுக்கு RM1,100 செலுத்தியதும் மேலதிக கட்டணம் கேட்கப்பட்டதால் மோசடி உறுதி செய்யப்பட்டது.போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் கண்டனமாக குறிக்க வேண்டும்; AI ஊடகக் குற்றச்செயல்களுக்கு கடுமையான சட்டம் தேவை என அவர் வலியுறுத்தினார்.