பிகேஆர் கட்சி கலாச்சாரத்தில் அவநம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்த பாண்டான் எம்பி ரஃபிஸி ராம்லி, GE16 பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் கட்சியைவிட்டும் விலக முடியும் என சூசகமாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 27 ஆண்டுகளில் கட்சியில் ஏற்பட்ட நல்ல நிகழ்வுகளை மறக்கமாட்டேன் என்றாலும், தற்போதைய நிலைமை தன்னை மாற்றிவிட்டதாகவும், இனி இணக்கமாக இயங்க முடியாது என்பதால் விலகுவது நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.