சிரம்பானில் உள்ள ஷாப்பிங் மாலில் அமைந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 59 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரவு 8.17 மணிக்கு தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது. முதல் மாடியில் சிக்கிய அவரை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தபோது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சடலம் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.