நேற்று இரவு நெகிரி செம்பிலான் நீலாயில், காஜாங்கிலிருந்து மலாக்கா நோக்கி சென்ற விரைப்பேருந்து உயர தடுப்புச்சுவரில் மோதியதில், 30 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து இரவு 10.30 மணிக்கு அழைப்பு பெறப்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்தது. 19 பயணிகள் கொண்ட பேருந்தில் காயமடைந்தவர்கள் செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஒன்பது பேர் கொண்ட மீட்புக் குழு செயல்பட்டது.