கடந்த வியாழக்கிழமை சுங்கை புலோ மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பெறும் போது உயிரிழந்தது. உடலில் தூசி, அழுக்கு, வீக்கம் மற்றும் வெட்டுக் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்தது. 27, 28 வயதுடைய பெற்றோர் காயங்களுக்கு காரணம் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். வாயிலும் மூக்கிலும் உலர்ந்த இரத்தம் இருந்தது. மருத்துவமனை அதிகாரியின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தம்பதிகள் இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.