ஜூலை 1 முதல் A4 காகிதங்களுக்கு 10% SST உயர்வு குறித்து முன்னறிவிப்பு மற்றும் ஆலோசனை இல்லாமல் அரசாங்கம் எடுத்து கொண்ட திடீர் முடிவை கெப்போங் எம்.பி லிம் லிப் எங் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலை தொழில்துறை, நுகர்வோர் மற்றும் ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்றும், செலவுகள் அதிகரித்து பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.முன்னோட்டம் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த வரி உயர்வு அதிகாரிகளுக்கு பொறுப்புகொடுக்கப்பட வேண்டும் என்றும், மாற்றத்திற்கு 2-3 மாத கால இடைவேளையை வழங்க அரசு வேண்டுகோள் விடுத்தார்.இப்படிப் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிப்பது மலேசியாவின் பொருளாதார நற்பெயருக்கு சேதம் என்பதையும் அவர் எச்சரித்தார்.