பண்டார் டாருல் அமானுக்கு அருகே உள்ள பிளஸ் விரைவுச்சாலையின் வெளியேறும் பகுதியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.