அமெரிக்காவின் 249வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி டிரம்ப் தனது முக்கிய வரி மற்றும் செலவுத்திட்ட மசோதாக் கையெழுத்திட்டு சட்டமாக்கினார். “பெரிய, அழகான மசோதா” என அழைக்கப்படும் இது, வரிவிலக்கு நீட்டிப்பு, இராணுவ செலவுகள் அதிகரிப்பு மற்றும் அகதிகளை வெளியேற்றுவதற்கான நிதியுடன் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது.இந்த மசோதா கடுமையான எதிர்ப்புகள் மற்றும் கட்சி பிளவுகள் இருந்தபோதிலும், இறுதியில் நாடாளுமன்றத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. ஆனால் இது, அமெரிக்காவின் கடனை 10 ஆண்டுகளில் 3.4 டிரிலியன் டாலரால் உயர்த்தக்கூடும் என கூறப்படுகிறது.மேலும், சிறிய வருமானம் உள்ள மக்களுக்கான உணவுத்திட்டம் மற்றும் Medicaid மருத்துவ காப்பீடு போன்ற நலத்திட்டங்களில் மிகப்பெரிய குறைப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சுமார் 1.7 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் மருத்துவ காப்பீடு பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மசோதா, டிரம்ப் அரசில் அண்மைக்கால வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, 2026 இடைத்தேர்தலில் இதை மக்கள் எதிர்ப்பை தூண்டும் வலுவான உருப்படியாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.