பாரிசில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்த பிரஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஏர்பஸ் மற்றும் மலேசியா எயர்லைன்ஸ் இடையே வரலாற்றுச் சிறப்பான ஒப்பந்தம் கையெழுத்தானது என அறிவித்தார். இது மட்டுமன்றி முக்கிய கனிமங்கள், அபூர்வக் கனிமங்கள் மற்றும் எரிசக்தி மாற்றம் உள்ளிட்ட துறைகளிலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மலேசியா ஏவியேஷன் குழுமம், ஏர்பஸின் A330neo விமானங்களை வாங்க உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மலேசியா எயர்லைன்ஸ் 20 மற்றும் எயர்ஏசியா 50 விமானங்களுக்கு ஆர்டர் விடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் அன்வார் கூறினார்.