Offline
கடலில் படகு விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 30 பேர் தேடல் தீவிரம்!
By Administrator
Published on 07/06/2025 09:00
News

இந்தோனேசியாவின் கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து பாலி தீவை நோக்கி புதன்கிழமை இரவு சுற்றுலா படகு புறப்பட்டது. இதில் 65 பேர் பயணித்தனர். பாலி தீவிற்கு அருகே மோசமான வானிலை காரணமாக படகு அலைகளில் சிக்கி கடலில் மூழ்கியது. தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து 29 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் கடலில் மாயமாகிய நிலையில், அவர்களை தேடும் பணியில் கடற்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிரமாக முயற்சி நடைபெற்று வருகிறது.

Comments