ஜூலை 4 அன்று சித்தார்த்தின் 3BHK, சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ், மிர்ச்சி சிவா நடித்த ராம் இயக்கிய பறந்து போ, கீர்த்தி பாண்டியனின் அஃக்கேனம் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.
பல படங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் தியேட்டர் பகிர்வு மற்றும் வசூலில் பிளவு ஏற்பட்டது.
பறந்து போ படம் குடும்பம் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையுடன் நல்ல விமர்சனங்களை பெற்று, முதல் நாளில் 42 லட்சம் வசூல் செய்துள்ளது.
சித்தார்த்தின் 3BHK படம் முதல் நாளே ஒரு கோடி வசூல் பெற்றது. பீனிக்ஸ் படம் 10 லட்சம் வசூல் செய்ததாக தகவல் உள்ளது.
விடுமுறை நாட்களையொட்டி பறந்து போ வசூல் மேலும் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.