வாஷிங்டன்,அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள கவ்டலெப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை, வெள்ளப்பெருக்கின்போது ஆற்றின் அருகே கோடை விடுமுறை முகாமில் பங்கேற்றிருந்த 7 முதல் 17 வயதிற்கு உள்பட்ட சிறுமிகள் 25 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 சிறுமிகளும் அடக்கம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய சிறுமிகளை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.